| Share and Comment | |||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|
|
Tweet |
|
|
|
|
|
தெளிந்த சிந்தை என்பதைப் பற்றி கேட்டதுண்டு. ஆனால் ஏனோ அதை கண்களால் அதிகம் பார்த்ததில்லை. அதை பார்க்க வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்: கமல்ஹாசனிடம் பேச்சு கொடுக்க வேணும். அன்னாரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன் நூறு பெற வேண்டியவை. இந்த காணொளிக்காட்சியில்(Video!!) அவர் ஆங்கில மொழியின் தேவையையும் தமிழ் மொழியின் உன்னதத்தையும் பசுமரத்தாணியைப் போல் நம் நெஞ்சில் பதிய வைக்கிறார். கேளுங்கள் தமிழர்களே, கேட்டு நீங்களும் சிந்தைத் தெளிவு பெறுங்கள். என் மனத்தினுள் இதுநாள்காறும் பொதிந்து கிடந்த சொற்கள் இவை. தன் தாய்-தந்தையை 'MOM'-'DAD' என்றழைக்கும் தமிழ்நாட்டு குழந்தைகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும் எனக்கு ஏற்படும் கோபத்தையெல்லாம் ஆக்கப் பூர்வமாக செலவிட இது ஒரு வழி. இந்த செய்தியை என்னால் இயன்ற வரையில் நான் பரப்புவேன். எப்படியென்று கேட்கிறீர்களா? இதற்கு மேல் எனக்கு உதவும் மக்களிடம் நான் 'thanks' என்று சொல்ல மாட்டேன்; 'நன்றி' என்று தான் கூறுவேன். அதுவும் ஒரு ஆரம்பம் தானே? நீங்களும் என்னைப் போல் 'வணக்கம்' 'நன்றி' என்று சொல்லிப் பழகுங்கள். சில ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர் பேசியும் பாடியும் வளர்த்தத் தமிழ்ப் பெண்ணை இளமை மாறாது காப்பது நம் கடமையன்றோ?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக