| Share and Comment | |||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|
|
Tweet |
|
|
|
|
|
சில நாள்களாக தமிழ் வலைதள மொழியை கற்று கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்குள் வளர்ந்து வந்தது. அந்த ஆசைக்காக நான் 'Firefox' இணைய உலவியை தமிழ் மொழியில் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திப் பார்த்தேன். அதில் நான் அறிந்த ஒரு உண்மை: தமிழ் உண்மையில் இணைய சொற்களை இன்னும் பெறவில்லை. ஒரு எடுத்துக்காட்டாக, "Bookmark" என்னும் சொல்லை "புத்தகக் குறிப்பு" என்று மொழியாக்கம் செய்துள்ளனர். கேட்கவே நாராசமாக இருந்தது, அந்த வார்த்தை. சொல்லுக்கு சொல் மொழியாக்குவது என்பது உண்மையான மொழியாக்கம் ஆகாது என்பதை தமிழர் நாம் உணர்ந்து, தமிழ் நாட்டின் தலைவர்களிடம் மன்றாடியேனும் ஒரு குழுவை உருவாக்கச் செய்ய வேண்டும். அந்தக் குழுவின் உறுப்பினர்கள் தமிழ் இலக்கணத்திலும், இணைய மற்றும் கணினி அறிவியலிலும், கற்பனா சக்தியிலும் வல்லவர்களாக இருக்க வேண்டும். அப்படிப் பட்ட குழு உருவாக்கும் சொற்களை, தமிழராகிய நாம் தரம் பார்த்து திருத்தியமைக்க வேண்டும். இப்படியானவொரு தரமிக்க செயல்முறையின் வாயிலாக உருவாகும் சொற்களை தமிழக அரசு, ஈழ மற்றும் சிங்கப்பூர் அரசுகளுடன் இணைந்து தமிழ் சொல் வரிசையில் அதிகாரப் பூர்வமாக இணக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் மொழியின் இனிமையுடன் கூடிய நல்வார்த்தைகள் இணைய உலகில் உருவாகும். இந்த செயல்முறையை இணைய மற்றும் கணினித் துறையில் மட்டுமல்லாமல் தமிழ் வளர்ச்சி பெற வேண்டிய ஏனைய துறைகளிலும் பயன்படுத்தி கம்பனும் சம்பந்தனும் வளர்த்த இம்மொழிக்கு நம்மால் இயன்ற தொண்டை செய்வோமாக.
வெற்றி வேல்! வீர வேல்!! தமிழன்னை வாழியவே!!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக