பக்கங்கள்

வியாழன், 27 மே, 2010

இறைவனை ஆரத்தழுவும் வாய்ப்பு


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed


மணமேடையில் மகிழ்ச்சிக்கு தூதானாய்
இறுதி வலத்தினிலோ சோகமே உருவானாய்
மன்னவன் காலடியில் மரியாதைக்காக விழுந்தாய்
வென்றவன் கழுத்தினிலே மாலையாக விழுந்தாய்
மங்கையின் கூந்தலில் அழகை இணைத்திட்டாய்
காதலன் கையினிலே அன்பாகவே ஆனாய், மலரே!!!
நீ நாளும் மலர்ந்து எம்போன்ற மானிடரை மகிழ்வி.
உன் சேவைக்கெல்லாம் நாங்கள் தரும் பரிசு -
நாங்களும் எட்ட நின்று வழிபடும் இறைவனை
ஆரத்தழுவும் வாய்ப்பு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக