பக்கங்கள்

திங்கள், 26 ஏப்ரல், 2010

இறைவனின் செல்லப் பிள்ளை


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed


காலம்...
கரியை வைரமாக்கும் மந்திரவாதி
மலையை மண்ணாக்கும் உழைப்பாளி
இயற்கையோடிணைந்து கூட்டணியாட்சி புரியும் அரசியல்வாதி
காலனுடன் உட்கார்ந்து நம் உயிரை விலை பேசும் வியாபாரி
உலகின் உண்மைகளை உன்னதமாய் விளக்கும் ஆச்சார்யன்
நம் வரலாறு எனும் சுமையைப் பொறுப்புடன் சுமந்திடும் தொழிலாளி
கருங்கூந்தலிலே வெண்மை தீட்டும் ஓவியன்
பல காலம் வாழ்ந்து விட்ட முதியவன்
பல காலம் வாழப் போகும் இளைஞன்
பலர் மீது கருணை புரியும் கருணாகரன்
பலருக்கு கொடுமை புரியும் கொலைகாரன்
இத்தனைக்கும், அவன்...
இறைவனின் செல்லப் பிள்ளை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக