| Share and Comment | |||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|
|
Tweet |
|
|
|
|
|
அவனுக்கெனவே காத்துக் கிடந்த பதுமையைப்
போல் முகம் மலர்ந்து நின்றாள் தாமரை மங்கை
வாசலில் மாக்கோலம் இட்ட தமிழச்சி தங்க கரம்
கொண்ட பகலவன் அருள் வேண்டி மண்டியிட்டாள்
பனி பொழிந்த இடமெலாம் ஒளி புகுந்து காலை பொழுது
இந்திரனை பொறாமை கொள்ளச் செய்து கொண்டிருந்தது
ஐயகோ!!! நாம் பூமிக்கு தலைவனாக முடியவில்லையே என்று
பல குழல் இசைத்தாலும் வாராத இனிமை
பகலவனை கண்டதும் பறவைகளுக்குள் வந்தது
வான் தன் தங்க மகனை வரவேற்க
பல வண்ண உடையணிந்து கொண்டது
தன் ஒளிக்கரங்கள் படையாக பூமியை பிடித்திருந்த
இருள் அசுரன் அரண்டோட படை தொடுத்து வந்தான் கதிரவன்
அவனுக்கு வாகை சூடி மகிழ்ந்திடுவோம் அவன்
ஆளுமையை போற்றிடுவோம்; அவன் தரும் ஒளியாட்சியில்
அரும் பெரும் காரியம் பல செய்வோம்-இருள் அசுரன்
பிடித்தாட்கொண்டாலும் மனம் தளரோம்
கண்களை இறுக மூடி கதிரவன் வரவுக்காக காத்திருப்போம்!!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக