பக்கங்கள்

சனி, 14 ஏப்ரல், 2012

பொன் வேய்ந்த பெருமாள்


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed

பொன் வேய்ந்த பெருமாளே
ஆண்டவன் ஆலயத்துக்கல்ல
அவன் உண்டாக்கிய உலகுக்கு!!
கதிரவனே, உன் கருணை தான் என்னே!!

ஞாயிறு, 11 மார்ச், 2012

வயிறும் மனமும்


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed

மானுடமும் மிருகமும் அணுவுக்கணு ஒத்தவை; ஓரனுவைத்
தவிர்த்து - நிறைவென்றுப் பெயர் அவ்வணுவுக்கு.
வயிறு நிறைந்தால் தானும் நிறையும் மிருகம்.
வயிறும் நெஞ்சும் நிறைந்தாலொழிய நிறையாது மானுடம்.

வயிறு நிரம்பாதோவென பயந்து மனம் நிரப்பும் செயல் மறுப்போர் மறக்கப் படுவர்.
வயிறு காய்ந்தாலும் மனம் நிரப்பி உய்வேன் என்பவர் போற்றப் படுவர்
வயிறும் மனமும் ஒருசேர நிரம்பும் பேறு பெறுவோர் புண்ணியம் செய்தோர்.

ஞாயிறு, 4 மார்ச், 2012

தமிழர் தமிழ் பேசி பழகுவது எப்படி?


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed

தெளிந்த சிந்தை என்பதைப் பற்றி கேட்டதுண்டு. ஆனால் ஏனோ அதை கண்களால் அதிகம் பார்த்ததில்லை. அதை பார்க்க வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்: கமல்ஹாசனிடம் பேச்சு கொடுக்க வேணும். அன்னாரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன் நூறு பெற வேண்டியவை. இந்த காணொளிக்காட்சியில்(Video!!) அவர் ஆங்கில மொழியின் தேவையையும் தமிழ் மொழியின் உன்னதத்தையும் பசுமரத்தாணியைப் போல் நம் நெஞ்சில் பதிய வைக்கிறார். கேளுங்கள் தமிழர்களே, கேட்டு நீங்களும் சிந்தைத் தெளிவு பெறுங்கள். என் மனத்தினுள் இதுநாள்காறும் பொதிந்து கிடந்த சொற்கள் இவை. தன் தாய்-தந்தையை 'MOM'-'DAD' என்றழைக்கும் தமிழ்நாட்டு குழந்தைகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும் எனக்கு ஏற்படும் கோபத்தையெல்லாம் ஆக்கப் பூர்வமாக செலவிட இது ஒரு வழி. இந்த செய்தியை என்னால் இயன்ற வரையில் நான் பரப்புவேன். எப்படியென்று கேட்கிறீர்களா? இதற்கு மேல் எனக்கு உதவும் மக்களிடம் நான் 'thanks' என்று சொல்ல மாட்டேன்; 'நன்றி' என்று தான் கூறுவேன். அதுவும் ஒரு ஆரம்பம் தானே? நீங்களும் என்னைப் போல் 'வணக்கம்' 'நன்றி' என்று சொல்லிப் பழகுங்கள். சில ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர் பேசியும் பாடியும் வளர்த்தத் தமிழ்ப் பெண்ணை இளமை மாறாது காப்பது நம் கடமையன்றோ?

சனி, 3 மார்ச், 2012

தமிழ் தொண்டு


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed


சில நாள்களாக தமிழ் வலைதள மொழியை கற்று கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்குள் வளர்ந்து வந்தது. அந்த ஆசைக்காக நான் 'Firefox' இணைய உலவியை தமிழ் மொழியில் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திப் பார்த்தேன். அதில் நான் அறிந்த ஒரு உண்மை: தமிழ் உண்மையில் இணைய சொற்களை இன்னும் பெறவில்லை. ஒரு எடுத்துக்காட்டாக, "Bookmark" என்னும் சொல்லை "புத்தகக்  குறிப்பு" என்று மொழியாக்கம் செய்துள்ளனர். கேட்கவே நாராசமாக இருந்தது, அந்த வார்த்தை. சொல்லுக்கு சொல் மொழியாக்குவது என்பது உண்மையான மொழியாக்கம் ஆகாது என்பதை தமிழர் நாம் உணர்ந்து, தமிழ் நாட்டின் தலைவர்களிடம் மன்றாடியேனும் ஒரு குழுவை உருவாக்கச் செய்ய வேண்டும். அந்தக் குழுவின் உறுப்பினர்கள் தமிழ் இலக்கணத்திலும், இணைய மற்றும் கணினி அறிவியலிலும், கற்பனா சக்தியிலும் வல்லவர்களாக இருக்க வேண்டும். அப்படிப் பட்ட குழு உருவாக்கும் சொற்களை, தமிழராகிய நாம் தரம் பார்த்து திருத்தியமைக்க வேண்டும். இப்படியானவொரு தரமிக்க செயல்முறையின் வாயிலாக உருவாகும் சொற்களை தமிழக அரசு, ஈழ மற்றும் சிங்கப்பூர் அரசுகளுடன் இணைந்து தமிழ் சொல் வரிசையில் அதிகாரப் பூர்வமாக இணக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் மொழியின் இனிமையுடன் கூடிய நல்வார்த்தைகள் இணைய உலகில் உருவாகும். இந்த செயல்முறையை இணைய மற்றும் கணினித் துறையில் மட்டுமல்லாமல் தமிழ் வளர்ச்சி பெற வேண்டிய ஏனைய துறைகளிலும் பயன்படுத்தி கம்பனும் சம்பந்தனும் வளர்த்த இம்மொழிக்கு நம்மால் இயன்ற தொண்டை செய்வோமாக.

வெற்றி வேல்! வீர வேல்!! தமிழன்னை வாழியவே!!!

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

பொன்னியின் செல்வா!!


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed


எந்திரம் போல் கசந்து கிடந்த என் நெஞ்சை
தேனும் பாலும் ஓடும் ஆறாய் ஆக்கி
வாரமொன்றும் நாள் மூன்றும் கழித்து
பஞ்சடைத்த கூடாக்கி போட்டு போனதேனப்பா, பொன்னியின் செல்வா?


பொங்கி வரும் காவிரியை கண் கொண்டு
ஒரு நாளேனும் காணேனோ - என
ஏக்கங்கொள்ளச் செய்து போனதேனப்பா, பொன்னியின் செல்வா?

ஆயிரமாண்டு பின்னோக்கி பயணம் போக
தூண்டி விட்டு கள்ளமறியா பிள்ளையை போல்
மூலையிலே கண்மூடிப் புத்தகமாய் தூங்குவதேனப்பா, பொன்னியின் செல்வா?

குமரி முனை பிறந்த எனை பொன்னியோடும்
கோழி வேந்தன் நாட்டிலுத்திர மாட்டோமாவென
சித்தங்கொள்ளச் செய்து விட்டதென்னபா, பொன்னியின் செல்வா?

பத்து தினம் எனை பண்டைத் தமிழகத்தில் உலவி
களிப்புறுமாறு செய்வித்து - பலவந்தமாய்
மீண்டும் இந்த இருபத்தோறாம் நூற்றாண்டுச்
சிறையிலடைத்தது தான் ஏனோ, பொன்னியின் செல்வா?

செவ்வாய், 19 ஜூலை, 2011

அன்றும் இன்றும்.


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed



அரும்பிலே அழகாய் தெரிந்ததெல்லாம்
இன்று அற்பமாக தெரிவதெதனாலோ?

அதிகம் தெரிந்து கொள்வதில் இப்படியுமோர் இடரா?
அட ராமா, நாள் பட நாள் பட சிறுவனாக வரம் தருவாயோ?
நான் பயின்றதெல்லாம் மறக்க செய்வாயோ?
- இப்படிக்கு,
மீண்டும் நிலவை வெள்ளி தட்டாக பார்க்க ஆசைப்படும் மானிட குலம்.

சனி, 16 ஜூலை, 2011

உன்னை கண்டதும்...


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed



காலமெல்லாம் காண கண் துடிக்குதடி
உனை கண்டதும் மனம் மயங்குதடி.
கண் திறந்தே மயங்கிட வழி  ஆண்டவன் தரவில்லையடி
என் செய்வேன் நான், நீயே சொல்லடி.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

மனதின் மணிமுடி


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed


சோலையுள் பூவென - விண்ணில் விண் மீனென
கண்ணில் கருமணியென பண்ணில் ராகமென
உன்னில் உள்ளதென்ன? மானுடா!!
உன்னை உயர்த்தி உலகின் சக்ரவர்த்தியாக்கியது
யாதெனத் தேடு....

நிலவிற்குக் குளிர்ச்சி மலருக்கு மணம்
கதிரவனுக்கு ஒளி உனக்கென்ன மனிதா?

உன்னதத்தின் சிகரம் போல்
கோபுரத்தின் உச்சம் போல்
உன் மனதின் மணிமுடியாய்
விளங்குவது எது? - அன்பெனும்
மூன்றெழுத்து தெய்வமன்றோ....?

புதன், 9 ஜூன், 2010

எறும்பூர கல் தேய்ந்து....


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed

எறும்பூர கல்லும் தேயுமாம்... 
தாம் தேய செய்த கல் தேய்ந்ததை
ஓரெறும்பேனும் காணுமோ?
முடியாதே!!! அவற்றுக்குத் தெரியாதே,
தம்மால் கல்லை தேய வைக்க முடியுமென்று.
அறிந்து கொள்ளுமளவு காலம் அவை
உயிருடன் இருப்பதில்லையே!!!

சனி, 29 மே, 2010

கோலமிட்டு கோலத்தையே வரவேற்றாள்


Share and Comment
Print Comment Email this Bookmark and Share RSS Feed


வானில் இறைவனே வியக்கும் வண்ணக் கோலமிட்டு
வரும் கதிரவனை வரவேற்க மாக்கோலமிட்டாள் மங்கை.